Live Love Laugh...
கட்டுரை. செப்டம்பர் 3, 2018 அன்று வெளியிடப்பட்டது

உங்கள் நட்பை பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்?

Friends

நம்மில் பெரும்பாலானோர், தங்கள் நண்பர்களையும் சிறந்த நண்பர்களையும் நன்றாக அறிந்திருப்பதாக கருதுவர், ஆனால் நம்மில் எத்தனை பேர் அவர்களுடன் உள்ள " நட்புறவை " புரிந்து கொண்டு உள்ளோம். பல்வேறு வகையான நட்புகள் எவ்வாறு ஒரே வகையான உறவில் இணைந்திருக்க முடியும் என்பது நமக்குத் தெரியுமா? ஒரு நபருடன் நாம் கொண்டுள்ள நட்பின் தன்மை நம் மன நலத்தை பாதிக்க கூடும் என்று நமக்குத் தெரியுமா?

நாம் பெரியவர்களாக வளரும்போது, நம் நெருங்கிய உறவுகள் மகிழ்ச்சியின் நிலையையும், நமது வாழ்க்கை மற்றும் இறப்பையும் கூட தீர்மானிக்கின்றன. நட்பு என்பது, நமது நம்பிக்கையை அதிகப்படுத்துதலிலும், நமது மன நலத்தை உறுதிப்படுத்துதலிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. ஆய்வுகள் மற்றும் நிபுணத்துவத்திலிருந்து, ஒன்று மட்டும் அல்ல பல வகையான நட்புகளை நம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். தவறான நட்புகள் அதிகமாக நம் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் நாம் உணர்ச்சி பூர்வமாக குழப்பம் அடைந்து, தவறான நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்துவிடுகிறோம்.


Types of Friendships

எனவே இங்கு நீங்கள் சந்தோஷமாக வளர்க்கவிரும்பும் அல்லது இழக்க விரும்பும் நண்பர்களின் பட்டியல், ஆனால் அவசியம் கவனமாக இருக்க வேண்டிய, மனநலத்தில் அதிக கவனம் வைக்க வேண்டிய நண்பர்களின் பட்டியல் உள்ளது
Intimate Friendships

நெருங்கிய நட்புகள்

நெருக்கமான நட்புகள் குறைகாண முடியாத, உணர்ச்சிபூர்வத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும். இவர்கள், நீங்கள் தினமும் சந்திக்க கூடிய உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இந்த நட்பு பொதுவாக நிபந்தனையற்றது, மற்றும் நண்பர்கள் நல்ல அல்லது கேட்ட நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பர். நாளடைவில் நெருக்கத்தினால் வெளிப்டையானதன்மை இந்த உறவில் ஒரு அங்கமாவதோடு இது ஒரு கூடுதல் நன்மையையும் கொடுக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இப்படி பட்டவர்களையே நாம் நமது 'சிறந்த நண்பர்கள்' என்று சொல்லுவோம். பொதுவாக இந்த நண்பர்கள் நமது ஆரோக்கியமான மனநலத்தில் அதிகம் பங்கு வகிக்கிறார்கள்
Toxic Friendship

நச்சு தன்மை கொண்ட நட்பு

பல சமூக ஆதரவு அமைப்புகள் நம் உடல் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆனால் எதிர்மறையான அல்லது நச்சு தன்மையுடன் கூடிய நட்புகள் நம் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன? நட்பு என்பது பல ஏற்றத்தாழ்வுகள் உடனேயே வளர்ந்திருக்கும். இந்த ஏற்றத்தாழ்வு சுழற்சிகள் ஒரு நபரை துன்புறுத்த கூடியதாகவும் , பாதிக்கப்பட்டவையாகவும் அல்லது சுய மரியாதையை பாதிக்கும் வகையிலும் செய்யலாம். இது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக இருக்கலாம், இதில் கொடுக்கும் நபர் குறைவாக உணர்கிறார், மற்றொருவர் இன்னும் வேண்டும் என்றும் அதிருப்தியுடன் இருப்பதாக உணர்கிறார். இந்த காரணிகள் பொதுவாக பிற எதிர்மறை நடத்தைகளை செயல்படுத்த, உறவில் உள்ள இரண்டு தனி நபர்களிடமும் காணப்படும், இத்தகைய உறவுகளானது வாயு ஒளியின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. உங்கள் மனதையும் நினைவையும் இழந்துபோனதைப் போல, நீங்கள் தவறாகப் பேசுகிறீர்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்வதின் அவசியத்தினை உணரவைக்கிறது.
நச்சு தன்மை கொண்ட நட்பு நம் மனநலம் மற்றும் நட்பு இரண்டின்மீதும் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு நட்பில் இருந்தால், மீண்டும் உங்கள் நட்பை ஒருமுறை சரிபார்க்கவும்.
Acquaintances

அறிமுகமானவர்கள்

அறிமுகம் என்பது அந்த மனிதர்களை நாம் சந்தித்து இருப்போம் , தெரிந்தவர்கள் அல்லது சந்தித்தவர்கள் , ஆழ்ந்து பார்த்தோமேயானால் அந்த நபரை நமக்கு தெரியாது. உதாரணமாக, சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது நெட்வொர்க்கிங் மூலமாகவோ நாம் அவர்களை அறிவோம். ஆழ்ந்த உறவு மற்றும் திறந்த தகவல்தொடர்பு அடிப்படையிலான 'உண்மையான' நட்புகளை வளர்ப்பதற்கு இடைப்பட்ட பரிவர்த்தனைகளின் கணிசமான அளவு தேவை என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. எவ்வாறாயினும் நமது சமூக நெட்ஒர்க் -ல் உள்ள நண்பர்களை நாம் உண்மையான நண்பர்களாகவும், நம் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் எண்ணுகிறோம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நண்பர்கள் முடிவில்லாத உண்மையான உலகத்துடன் ஒன்றிணைய முனைகின்றனர். அத்தகைய நட்புகளிடமிருந்து உணர்ச்சிபூர்வ ஆதரவை எதிர்பார்ப்பது நியாயமற்றதும், ஆபத்தானதுமாகும். சமூக நட்புகள் உண்மையான ஊடகங்கள் மூலம் மட்டுமே உருவாவதோடு, ஒரு நபர் துயரமடைந்திருக்கும் சந்தர்ப்பங்களில் நெருக்கமான தொடர்புகளையும், தனிப்பட்ட தொடர்பையும் கொண்டிருப்பதிலை . உங்களுக்கு தேவை ஏற்படும்போது உங்கள் சமூக நெட்ஒர்க் உங்களுக்கு உதவுகிறது, ஆனால் நீங்கள் அதிலிருந்து அதிகம் எதிர்பார்க்கும் போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
Cheerleading Friendships

சந்தோஷப்படுத்த கூடிய நட்பு

ஒரு ஆய்வின் படி, நகைச்சுவை பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான நுண்ணறிவு மற்றும் சமூக திறமைகளுடன் தொடர்பு கொள்கிறது. நட்புக்குள் நகைச்சுவை, மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் ஆகியவை அடங்கும் போது, அது இயல்பாகவே நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு புதிய அனுபவத்தை முயற்சி செய்வதற்கு உங்கள் நண்பன் உங்களை ஊக்குவித்து உள்ளாரா, உதாரணமாக புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள ? நீச்சலடிக்க ? அப்போது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது
பெரும்பாலும் இத்தகைய நட்பு இருவருக்கும் ஆதரவாகவும் ஊக்குவிப்பதாகவும் இருக்கும். இது அவர்களுக்கு வேடிக்கையாகவும், தன்னிச்சையானதாகவும், உற்சாகமாகவும் இருப்பதை போன்ற அனுபவத்தினை கொடுக்கின்றது. அவர்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் ஆதரவாக சாய்ந்துகொள்ள தோள் கொடுக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் உங்களை நிச்சயம் சந்தோஷப்படுத்தி, ஊக்கப்படுத்தி, உலகத்தை ஆராய வைப்பதோடு, துணிச்சலானவர்களாக, புதிய யோசனைகள், மக்கள், கலாச்சாரம் மற்றும் அனுபவங்களை அறிமுக படுத்துபவர்களாக இருப்பர். இப்படி பட்ட நட்பு நல்ல மனநலத்தை ஊக்குவிக்கிறது, இருப்பினும் இது போன்ற உறவின் உணர்ச்சி குறைபாடுகளை ஒப்புக்கொள்வது அவசியம்.
Spiritual Friendships

ஆன்மீக நட்புகள்

எப்போதாவது நீங்கள் ஒரு வழிகாட்டி, அல்லது தத்துவ ஞானியிடம் உங்கள் வாழ்க்கை தடுமாறும்போது, எல்லாம் கைமீறிப்போகும்போதோ அல்லது குழப்பமாக இருக்கும்போதோ சென்று உள்ளீர்களா? இந்த நபர்கள் உங்களுடைய மனநலத்திறன் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர், ஏனெனில் இந்த மக்கள் பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளில் வலுவான பாத்திரத்தை வகிக்கிறார்கள்.
இவர்கள் உங்களுடன் தினமும் காபி குடிக்க வராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் உங்களுக்கு வழிகாட்ட மற்றும் ஆதரவு கொடுக்க நிச்சயம் முன்வருவார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டி என்ற நிலையில் இருந்துகொண்டு உங்கள் வாழ்க்கையில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பதோடு, வாழ்க்கையில் சரியான திசையில் உங்களை வழிநடத்த முயல்கின்றனர். இந்த நட்பு மிகவும் முக்கியமானது, நாளின் கடைசியில் இந்த நண்பர்கள் உங்களை உற்சாகபடுத்துபவர்கள்தான் என்பதை நீங்கள் புள்ளிவிவரங்களினால் இல்லாமல் முழு மனதுடன் புரிந்துகொண்டால், இந்த நட்பு மிகவும் முக்கியமானது.
நீங்கள் எந்த வகையான நட்புறவை கடைப்பிடிக்கிறீர்கள் என்பதோடு, நீங்கள் ஆதரிக்கப்படுகிறீர்களா, அக்கறை உங்கள்மீது காட்டப்படுகிறதா நீங்கள் மன நலத்துடன் இருக்க முடிகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இந்த வழியில், நீங்களும் ஒரு நல்ல நண்பராகவும், நல்ல நண்பர்களுடன் எப்பொழுதும் மனதில் உற்சாகமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்க முடியும்.
X