Live Love Laugh...
Article. Published on Sept 27, 2019.

சென்று அடைவது

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உள்ள ஒருவரை பார்ப்பது அச்சுறுத்தலை தருவதாக தோன்றலாம்; ஆனால் சில நேரங்களில், அவருடனான சிறிது உரையாடல் ஒரு உயிரைக் காப்பாற்றும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

டாக்டர் பூர்ணிமா போலா எழுதிய கட்டுரை
Suicide

யாரோ ஒருவர் பகிரும்போது

நீங்கள் நீண்ட நாட்களாக வழக்கமான விஷயங்கள், குழந்தைகள், போக்குவரத்து மற்றும் பல காரணங்களினால் உங்கள் அண்டை அசலாருடன் பேசவேயில்லை. மிகவும் எதிர்பாராத விதமாக, சிறிது தயக்கத்திற்கு பிறகு, அவள் வாழ்க்கையை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். அடுத்தது நீங்கள் என்ன செய்வீர்கள் அல்லது சொல்வீர்கள்? உங்களால் அவர்களுக்கு உதவ முடியுமா?

இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம், நீங்கள் அவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது போல் காண்பிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்குவதாகும். தற்கொலை எண்ணத்தின் எந்தவொரு வெளிப்பாடும் ஒரு ‘உதவிக்கான அழைப்பு’ என்று தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தற்கொலை எண்ணத்தை பற்றி ஒரு நபரை நேரடியாகக் கேட்பது தற்கொலை செய்து கொள்ள தூண்டக்கூடும் என்று நீங்கள் கவலைபட்டாலும் கூட , அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது உண்மையில் மிகவும் உதவியாக இருக்கும். அவளுடைய கதையை இரக்கத்தோடு அமைதியாக முழுமையாக கேளுங்கள். இது அவளுக்கு தான் தனியாக இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தும். "நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் நான் உங்களை நினைத்து கவலை படுகிறேன். உங்களுக்கு உதவ விரும்புகிறேன்" இப்படி நீங்கள் ஏதாவது சொல்லலாம். அல்லது " நீங்கள் எப்பொழுதிலிருந்து இப்படி உணர ஆரம்பித்தீர்கள்? நீங்கள் இப்படி உணரும்படி ஏதாவது நடந்ததா எதனால் இப்படி தோன்றுகிறது" என்று அவர்களிடம் கேட்கலாம்.

என்ன சொல்வதை தவிர்க்கவேண்டும் ?

“நீங்கள் இன்னும் நிறைய நாள் வாழவேண்டும் ” அல்லது “உங்கள் தற்கொலை உங்கள் குடும்பத்தை பாதிக்கும்” அல்லது “மக்களுக்கு அதிக பிரச்சினைகள் உள்ளன” அல்லது “நீங்கள் சுயநலமும் பலவீனமும் அடைகிறீர்கள்” போன்ற விஷயங்களைச் சொல்வதைத் தவிர்க்கவும். நமக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், இப்படி பட்ட கருத்துக்கள் நல்லது செய்வதை விட தீங்கு விளைவித்துவிடும்.அதற்கு பதிலாக, உண்மையான, பச்சாதாபமான உரையாடலைக் கொண்டிருப்பது துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு வலையாக இருக்கும்.

அடுத்தது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவள் மிக தீவிரமாக இந்த விஷயத்தை பற்றி சிந்திக்க கூடும், எனவே இந்த தகவலை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அவள் உங்களை கேட்க கூடும்.

  • உங்கள் விவாதங்களை ஒரு ரகசியமாக வைத்திருப்பதாக ஒருபோதும் உறுதியளிக்க வேண்டாம்.
  • செயல் பட துவங்குங்கள் அவளுக்கு உங்களால் முடிந்த அளவு ஆதரவு அளித்து தேவையான உதவிகளை செய்யவும்
  • அவர்களை ஒருபோதும் தனியாக விட வேண்டாம்
  • நீங்கள் அவளுடைய குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு உங்கள் கருத்துக்களை மெதுவாகப் பகிர்ந்து கொள்ளலாம்
  • அவர்கள் ஒரு நெருக்கடி ஹெல்ப்லைனை அழைக்க பரிந்துரைக்கவும் அல்லது ஒரு மனநல நிபுணரைப் பார்க்கும்படி பரிந்துரைக்கவும். அதனால் எந்த பலனும் இல்லை என்றோ அல்லது நம்பிக்கை இல்லாமல் அவள் இருக்கலாம் ஆனால் நீங்கள் தொடர்ந்து அதனை வலியுறுத்தவும்.

நீங்கள் எல்லோருக்கும் உதவ முடியாமல் போகலாம், ஆனால் உங்களை அணுகிய ஒருவரின் உயிரை நீங்கள் காப்பாற்ற முடியும்.

X