Live Love Laugh...
Article. Published on Nov 14, 2019.

வயதானவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வின் அறிகுறிகளை நாம் ஏன் கவனிக்காமல் விடுகிறோம்

Depression in the Elderly

ஒரு தனிநபர் சமுதாயத்தை நாம் உற்று நோக்கும்போது போதுமான ஆதரவு அமைப்புகள் இல்லாமல் மனச்சோர்வு போன்ற மனநல கவலைகள் வேகமாக அதிகரித்து வருவதை காணலாம் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு வயது மக்கள் மன அழுத்தத்தால் பலவிதமாக பாதிக்கப்பட்டுள்ளனர்

குழந்தை பருவத்திலும், இளமைப் பருவத்திலும் ஒரு முக்கிய காரணியாக விளங்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வு, பெரும்பாலும் வயதான காலத்தில் ஒரு உடல்நல குறையாக கருதப்படுகிறது | மாறாக வயதானவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல் நலம் மோசமடைவதோடு வாழ்க்கை சூழ்நிலைகளும் மாறுவதால், அவர்களுக்கு இது உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தி ஆபத்துக்கு வழிவகுக்கிறது

மனச்சோர்வடைந்த முதியவர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் வயதான மக்களில் 21.9% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்| புள்ளி விவரங்களின் படி மற்ற இடங்களில் மனச்சோர்வு அடைந்த வயதானவர்கள் 7% மட்டுமே, ஆனால் இது இந்தியாவில் அதிகமாக உள்ளது| வயதானவர்களுக்கு உடல்நல குறைவோடு மனநோய்களின் அறிகுறிகள் குறிப்பாக மனச்சோர்வு ஏற்பட்டால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்|

எடுத்துக்காட்டாக, தூக்கமின்மை அல்லது பசியின்மை அல்லது நினைவாற்றல் இழப்பு போன்றவை மன நோய்களின் சில அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை, இதய நோய், கீல்வாதம் அல்லது முதுமை போன்ற உடல் நோய்களாலும் ஏற்படலாம்.

ஆகவே வீட்டில் உள்ள முதியவர் நினைவாற்றல் இழந்து தூக்கமின்மையுடன் காணப்பட்டால் அவர் மன உளைச்சலுக்கோ அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

மனச்சோர்வு போன்ற மனநல கவலைகள் பல்வேறு சமூக, உளவியல் மற்றும் உடலியல் காரணிகளால் ஏற்படலாம்| மனச்சோர்வின் பொதுவான அறிகுறிகள் மனச்சோர்வடைந்த மனநிலை, இன்பம் / ஈடுபாடு இல்லாமை, எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு, பயனற்ற தன்மை மற்றும் / அல்லது நம்பிக்கையற்ற தன்மை, சோர்வு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஆகும்| பொதுவாக இந்த அறிகுறிகள் சிலவற்றோடு முதுமை தொடர்புடையது என்பதால், மனச்சோர்வு வயதானவர்களிடையே மிக எளிதாக மறைக்கப்படும்


மனச்சோர்வு: முதுமையின் இயல்பான பகுதி அல்ல

வயதானவர்கள் மற்ற வயதினர் அனுபவிக்கும் வாழ்க்கை அழுத்தங்களோடு மேலும் சில குறிப்பிட்ட சிக்கல்களினாலும் பாதிக்கப்படலாம்

உதாரணமாக, நேசிப்பவரின் இழப்பு, ஓய்வு, சமூக ஆதரவு அமைப்புகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ நோய்கள் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு வயதான காலத்தில் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்| இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சோர்வின் அறிகுறிகளான - மோசமான நினைவாற்றல், சீரற்ற தூக்கம், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சந்தோஷமின்மை மற்றும் சில நேரங்களில் மரணம் குறித்த எண்ணங்கள் ஆகியவை வயதானதற்கான அல்லது உடல் நோய்க்கான அறிகுறிகள் என குழப்பமடையக்கூடாது.

இதனால்தான் மருத்துவ உதவி மற்றும் நிபுணர்களின் தலையீடு அவசியம் என்று சொல்லப்படுகிறது.| வயதானவர்கள் பெயர்களை மறப்பதோ, தங்கள் உடைமைகளை தவறாக வேறு இடங்களில் வைப்பதோ, செல்ல வேண்டிய திசைகளை நினைவுபடுத்தி கொள்ள போராடுவதோ ஒரு சிறிய அளவிலான நினைவு இழப்பினை குறிக்கின்றது, இந்த குணாதிசயங்கள் பெரும்பாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையையோ அல்லது அவர்களின் சுதந்திரத்தையோ பாதிக்காது| ஆனால் வயதானவர்களிடையே மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறியாக ஏற்படும் நினைவாற்றல் இழப்பு, திசைதிருப்பல்,ஆகியவை தகவல்தொடர்பு சிரமங்களை ஏற்படுத்தி அவர்களின் வழக்கமான வாழ்க்கையை சிதைக்கும்| வயதானவர்களிடையே பொதுவாக ஏற்படும் மறதி, கண்டறியப்படாமலோ அல்லது சிகிச்சை அளிக்கப்படாமலோ இருந்தால் அவை மனச்சோர்வின் தீவிர அறிகுறிகளாக உருவாகலாம்” என்று இந்த சிகிச்சையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஆசியாவின் சான்றளிக்கப்பட்ட தி லைவ் லவ் லாஃப் அறக்கட்டளையின் தலைவர் நாடு கடந்த ஆய்வாளரான அன்னா சாண்டி அவர்கள் கூறுகிறார்

முதுமை பல உடல் நல குறைகளை ஏற்படுத்தி மனக்கவலையை கொடுக்கும் அதே வேளையில் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை இது மறுக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

சரியான மருத்துவர் மற்றும் சிகிச்சையாளரின் ஒருங்கிணைப்புடன் குடும்ப ஆதரவும் வயதானவர்களின் முன்னேற்றத்திற்கும் மன நலனுக்கும் வழிவகுக்கும்.

உங்களுக்கு மிக நெருக்கமான அன்பான ஒருவருக்கு தொழில்முறை ஆதரவு தேவை என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து www.thelivelovelaughfoundation.org/therapist.html இல் உள்நுழைந்து, உங்களுக்கு அருகாமையில் உள்ள ஒரு சிகிச்சையாளரைக் கண்டறியவும்|

X