लिव लव लाफ...
கட்டுரை. மே 15, 2019 அன்று வெளியிடப்பட்டது

மனநலம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்வது

நாம் நேசிக்கும் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளானால் நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ளுவது ஒரு தந்திரமான செயலாகும். அவர்களை ஆதரிப்பதற்க்காக நீங்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களை நேசிப்பவருக்கு மரியாதை மற்றும் பச்சாதாபத்தை அளிக்கவேண்டும். மன அழுத்தம், பதட்டம் அல்லது வேறு ஏதாவது மனநலக் குறைபாடு கொண்ட பெரும்பாலானோர் தனிமை அல்லது பிறரால் தனிமைபடுத்தப்படுவதை உணர்வதாக அடிக்கடி தெரிவிப்பார்கள். எனவே நீங்கள் அவர்களிடம் உங்கள் திறனை பயன்படுத்தி பரிவுடனும் மற்றும் ஒருதலைப்பட்சமாக இல்லாமலும் பழகினால் அவர்கள் விரைவாக குணமடைய உதவுவதில் உங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கும்.

கண்ணீர் மற்றும் உணர்ச்சிகள் நிரம்பி வழிவதை காண தயாராக இருங்கள்

அவர்களிடம் பேசுவதற்கு முன்னால், அவர்களின் செயல்களை எதிர்பார்த்திருந்தால் நாம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கலாம். எப்போதும் அவர்கள் வலி மற்றும் கோபத்தை கையாள்பவராக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் அவர்கள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் உடைந்து போகலாம். மாறாக, பார்ப்பதற்கு அவர்கள் தனிமைப்பட்டும், உணர்ச்சியற்றவர்களாகவும் தோன்றலாம். இந்த இரண்டு எதிர்வினை செயல்களும் பொதுவானவை, மேலும் இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால் நீங்கள் எளிதாக உணர முடியும்.

அவர்கள் வரையும் எல்லை கோட்டிற்கு மதிப்பளியுங்கள்

ஒவ்வொரு தனி நபரும் வித்தியாசமானவர், ஒவ்வொரு நபருக்கும் உணர்ச்சி ரீதியிலான தேவைகள் வேறுபடுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சிலர் அரவணைப்பு பெறவும் , ஆறுதல் பெறவும் விரும்புகிறார்கள், மற்றவர்கள் அவர்களுக்கான இடத்தைவிரும்புகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையளிப்பது எப்படி என்பது பற்றி உங்களுக்கு தெளிவாக தெரியாவிட்டால், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிய; நான் உங்கள் கையை பிடித்துக்கொள்ளலாமா? என்று கேட்பது உங்களிடமிருந்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிய உதவும். நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தையும் அவர்கள் உங்களை நம்பலாம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தீர்ப்பு வழங்குபவராகவோ, இறங்கி வந்து விட்டுக்கொடுப்பவராகவோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

இது உரையாடலுக்கு ஒரு மோதல் தொனியைக் கொண்டிருப்பதாக உணர்ந்தால், உங்கள் நேசி ஒருவர் தற்காப்புடன் இருப்பார். "சந்தாஷமாக இரு" அல்லது "நீங்கள் பெரும்பாலான மக்களை விட சிறந்து இருக்கிறீர்கள், நீங்கள் பெற்றுப்பதற்கு நன்றியுடன் இருங்கள் போன்ற சொற்றொடர்கள்" பயன்தராது. மேலும் கருணை மற்றும் ஆர்வமுடன் உரையாடலைத் தொடங்கி முயற்சி செய்யவும். குறுக்கீடு இல்லாமல் அவர்கள் விரும்பும் அளவுக்கு அவர்கள் பேசுவதை அனுமதிக்கவும். சில நேரங்களில், அவர்களுடன் கவனத்துடனும், பரிவுடனும் இருப்பது நமக்கு உதவியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பச்சாதாபம் vs. பரிவு

"உணர்ச்சிவயப்பட்டால் மற்றொரு நபரின் உணர்ச்சிகளை அடையாளம் காணவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ ஒருவரின் திறன் என வரையறுக்க முடியும், அல்லது கற்பனையான தன்மை" (கார்ல் ரோஜர்ஸ், ப்ரென் பிரவுன்). இந்த உணர்ச்சி பரிதாபம் (இரக்க உணர்வு, துக்கம், அல்லது இன்னொருவர் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கான பரிதாப உணர்வு) போல் தோன்றினாலும், இவ்விரண்டிற்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. பரிவு காட்டுவதற்கு நாம் மற்றவரின் நிலையில் நம்மை வைத்து வேண்டும். இந்த தனித்தன்மை நமக்கு நெருக்கமானவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று.

அறிவுரை வழங்குவதைவிட எதிர்வினை கவனிப்பு

அறிவுரை வழங்குவது அல்லது பிறர் கூறுவதற்கு ஏற்றவாறு நடந்துகொள்வது போன்றவற்றில் குறிக்கோளாய் இருப்பதை விட, பிரதிபலிப்பு கவனித்தல் நமக்கு நெருக்கமானவர்களின் கண்ணோட்டத்தை (POV) புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. அது பிறரின் தவறை சுட்டிக்காட்டுவதற்கு தூண்டினாலும், அவ்வாறு செய்யாதீர்கள் ஏனெனில் உங்கள் நண்பர் அதை கேட்கும் மனநிலையில் இல்லாமல் இருக்க கூடும்.

உங்கள் சொந்த பிரச்சனையுடன் ஒப்பிட்டு அவர்களின் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்

பெரும்பாலும், இதேபோன்ற சூழ்நிலைகளில் நமக்கு நடந்ததைப் போல் உணர்ந்தால், அந்தக் கதைகள் இதற்கு பதிலாக நமது கவனத்தை ஈர்க்கும். ஆனால் தற்செயலாக, அது நமது நண்பர்களுக்கு நாம் அவர்களது பிரச்சனைகளை குறைத்து மதிப்பிடுவதாக தோன்றிவிடும்.

உதவி கிடைக்கும் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளியுங்கள்

இப்போது விஷயங்கள் சிக்கலானதாக தோன்றினாலும், அது முடியும், மேலும் சிறப்பானதாக நடக்க்கும் என்று வலியுறுத்துங்கள். உதவி கேட்பது என்பது மீண்டு வருவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஒரு சிகிச்சையாளரையோ, ஆலோசகரையோ அல்லது மனநல மருத்துவரையோ சென்று சந்தித்து பேசுவது அவர்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் அவர்களுக்குத்தான் எப்படி நிலைமையை சிறப்பாக கையாள்வது என்று தெரியும். உங்கள் நண்பருடன் ஒத்துப்போகக்கூடிய நெருக்கமான விவரங்களை தெரிந்துகொள்ள, நீங்கள் ஆன்லைனில் விரைவாக தேடலாம். மேலும், மனநல மருத்துவரிடம் அவர்கள் செல்லும்போது நீங்களும் உடன் சென்றால் அது அவர்களது மன உறுதியை அதிகரிக்கும் மற்றும் அவர்களுக்கு தைரியம் அளிப்பதாக இருக்கும்.

பொறுமையாய் இருங்கள்

இந்த காலகட்டத்தில் நாம் நேசிப்பவர் உணர்ச்சியை வெளிப்பட செய்ய வாய்ப்பு உள்ளது. மனநிலை ஊசலாட்டம் என்பது பெரும்பாலும் மன நோய்களை சார்ந்திருக்கும்.எனவே, உங்கள் நண்பர் குறிப்பாக ஒரு நாளைக்கு மோசமானவராக தோன்றினால், நீங்கள் அவருக்கு எதையாவது செய்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை; மாறாக, அவர்கள் தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிக்கலை அனுபவித்திருக்கக்கூடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்; நீங்கள் நேசிப்பவரின் நோய் அவர்களின் நடத்தை மற்றும் தொடர்பு திறன்களை பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே நேரத்தில், உங்களுடைய மனநல ஆரோக்கியம் அவர்களுடையதைப்போல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை , உறுதிப்படுத்த நீங்களே உங்கள் எல்லைகளை வரையறுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அவர்களை கவனியுங்கள்

இந்த உரையாடல் ஒரு திருப்புமுனையாக இருந்தாலும், அவ்வப்போது அவர்களை சரிபார்ப்பது அவசியமானது. வேலை மற்றும் பிற கடமைகள் காரணமாக அவர்களுடன் தினசரி நீண்ட உணர்ச்சிபூர்வமான உரையாடுவது சவாலானதாக இருக்கும்போது, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என கேட்டு நாம் அனுப்பும் ஒரு சிறிய குறுந்தகவல் நாம் அவர்களிடம் காட்டும் அக்கறை, ஆதரவு மற்றும் முக்கியமாக அவர்கள் தனித்து இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.

X